தெற்கு திசையின் வெற்றிச் சுடர் இந்திய கடற்படை நிலையம் ஐ.என்.எஸ் கட்டபொம்மனை அடைந்தது

தெற்கு திசையின் வெற்றிச் சுடர் இந்திய கடற்படை நிலையம் ஐ.என்.எஸ் கட்டபொம்மனை அடைந்தது
X

தெற்கு திசையின் வெற்றிச் சுடர் 

வெற்றிச் சுடர் இந்தியாவின் தெற்கு முனையான கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்படும், இதில் மாவட்ட சிவில் நிர்வாகத்தின் முன்னிலையில் வீரர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கபடுவார்கள்.

தெற்கு திசையின் வெற்றிச் சுடர் 2021 ஜூலை 11 அன்று திருநெல்வேலிக்கு அருகில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையம் (ஐ.என்.எஸ்) கட்டபொம்மனை அடைந்தது. நிலைய தளபதி, கேப்டன் ஆஷிஷ் கே ஷர்மா மற்றும் பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் குடும்பங்கள், சிவில் நிர்வாகத்தின் பிரமுகர்கள் மற்றும் வீரர்கள் சம்பிரதாய முறைப்படி சுடரை பெற்றுக்கொண்டனர்.


1971ம் ஆண்டு உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. வருகை தந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு பாராட்டு விழா எடுக்கப்பட்டது. மேலும், 1971 வெற்றியைக் குறிக்கும் போர் வீரர்களை கவுரவிக்கும் விதமாக கலாச்சார நிகழ்ச்சி பெண்கள் மற்றும் குழந்தைகள் நடத்தினர். அனைத்து நிகழ்ச்சிகளும் கோவிட நெறிமுறைகளையும் பின்பற்றி ஏற்பாடு செய்யப்பட்டது.

வெற்றிச் சுடர் தீபகற்ப இந்தியாவின் தெற்கு முனையான கன்னியாகுமரிக்கு எடுத்துச் செல்லப்படும், இதில் மாவட்ட சிவில் நிர்வாகத்தின் முன்னிலையில் வீரர்கள் அழைக்கப்பட்டு கௌரவிக்கபடுவார்கள். 1971 போரின் போது இறுதி தியாகம் செய்த 1971 போர் வீராங்கனைகள், மறைந்த சிப்பாய் காசிமணி மற்றும் மறைந்த நாயக் சங்கிலி செல்லையா ஆகியோர் வீடுகளுக்கு திருநெல்வேலிக்கு 'வெற்றிச் சுடர்' கொண்டு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் போரில் பங்குபெற்றோரின் குடும்பத்தினரும் கௌரவிக்கப்படுவார்கள்.

ஜூலை 13 ஆம் தேதி, வெற்றிச் சுடர் ஐ.என்.எஸ் கட்டபொம்மனிலிருந்து புறப்பட்டு தூத்துக்குடி மாவட்டம் வழியாக செல்லும். என்.சி.சி மாணவர்கள் மற்றும் சிவில் நிர்வாகத்தின் பிரமுகர்கள் முன்னிலையில் கடலோர காவல்படையினரிடம் வெற்றி சுடர் ஒப்படைக்கப்படும். அதன்பிறகு, வெற்றிச் சுடர் உச்சிப்புளியில் உள்ள இந்திய கடற்படை நிலையம் பருந்துவிடம் ஒப்படைக்கப்படும்.


1971 போரில் இந்தியா பெற்ற வெற்றியை நினைவுகூறும் வகையில் பொன்விழா கொண்டாட்டங்கள் கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கியது. தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள தீச்சுடரில் இருந்து நான்கு வெற்றி சுடர்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொன்றும் 1971 போரில் பங்கு பெற்ற வீரர்கள் மற்றும் விதவைகள் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக நான்கு திசைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!