நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர் வழங்கினார்

நெல்லை:தாய், தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உதவி தொகை : ஆட்சியர் வழங்கினார்
X
தாய் தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 15 லட்ச மதிப்புள்ள ஈட்டுறுதி பத்திரங்களை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வழங்கினார்.

நெல்லை மாவட்டத்தில் தாய், தந்தையை இழந்த மூன்று குழந்தைகளுக்கு தலா 5 லட்சத்துக்கான ஈட்டுறுதி பத்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.

தாய். தந்தை இருவரையும் இழந்துள்ள குழந்தைகளுக்கு நிவாரண உதவித் தொகையாக ரூபாய் 5 லட்சம் வழங்கப்படும் என்ற சிறப்பு திட்டத்தை தமிழக முதல்வர், அறிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகா, துத்திக்குளம் கிராமத்தைச் சார்ந்த ஜெப மாணிக்கராஜ்- ஞானம்மரிய செல்வி ஆகியோர் மரணம் அடைந்தனர். இந்த தம்பதியரின், தர்மராஜ், ஸ்டீபன்ராஜ், ஜெப செல்வராஜ் ஆகிய மூன்று குழந்தைகளுக்கு தலா ரூ. 5 லட்சம் வீதம் 15 லட்சம் மதிப்புள்ள ஈட்டுறுதி பத்திரங்களை, குழந்தைகளின் பாட்டி அன்னபுஷ்பத்திடம், நெல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு வழங்கினார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், குழந்தை நல குழு தலைவர் சந்திரகுமார், பாதுகாப்பு அலுவலர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai business process automation