நெல்லை-ஸ்ரீ வானமாமலை கோவிலில் ஆடிப்பூர சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது

நெல்லை-ஸ்ரீ வானமாமலை கோவிலில் ஆடிப்பூர  சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது
X

நெல்லை வானமாமலை பெருமாள், அலங்காரத்தில்.

நாங்குனோி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு பெருமாள், தாயாா் ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம்.

நாங்குனோி ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் திருஆடிப்பூரத்தை முன்னிட்டு பெருமாள் தாயாா் ஆண்டாள் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது.

நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரியில் உள்ள ஸ்ரீ வானமாமலை பெருமாள் கோவில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகவும், ஸ்வயம்வக்த சேஷத்திரங்களில் ஓன்றானது. சுவாமி நம்மாழ்வாரால் மட்டும் 11 பாக்களில் பாடப்பெற்றது. இத்தலத்தில் மட்டுமே சடாரியில் நம்மாழ்வாரின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.

இங்கு இறைவனுக்கு தினந்தோறும் தைல அபிஷேகம் நடைபெறும். அந்த எண்ணையை எடுத்து இங்குள்ள நாழிக்கிணற்றில் ஊற்றி வருகின்றனர். இந்த நாழிக்கிணற்றில் உள்ள எண்ணையை நம்பிக்கையுடன் உண்டால் நோய் தீரும் என்பது நம்பிக்கை ஆகும்.

சிறப்புகள் வாய்ந்த இத்திருத்தலத்தில் பல்வேறு உற்சவங்கள் ஆண்டு முமுவதும் கொண்டாடப்படுகின்றது. ஆடி மாதம் வருகின்ற ஆடிப்பூரத் திருவிழா ஸ்ரீஆண்டாளுக்கு 10 தினங்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. தினமும் பெருமாள், தாயாா், ஆண்டாள் ஆகியோா் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

ஆடிப்பூர தினம் பெருமாள், தாயாா் மற்றும் ஆண்டாளுக்கு சாஸ்திர முறைப்படி வைபவமாக திருமஞ்சனம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் பெருமாள்,தாயாா் அருள்பாலித்தனா். வைணவப் பொியோா்களால் ஆண்டாள் அருளச் செய்த திருப்பாவை, வாணரமாயிரம்,நாச்சியாா் திருமொழி பாடப்பட்டது. பெருமாளுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்ததும், ஜீயா் சுவாமிகளுக்கு மாியாதை செய்யப்பட்டன. தொடர்ந்து தீா்த்தம், பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு