ஊரக உள்ளாட்சி தேர்தல்: களக்காடு ஒன்றியத்தில் பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்

ஊரக உள்ளாட்சி தேர்தல்: களக்காடு ஒன்றியத்தில் பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம்
X

களக்காடு ஒன்றியம் பத்மநேரியில் பாஜக, அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்காெண்டனர்.

களக்காடு ஒன்றியத்தில் போட்டியிடும் பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள் தேர்தல் பிரச்சாரம் மேற்காெண்டனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றிய பத்மநேரியில் பாஜக கட்சியின் தலைவர்கள் பாஜக மற்றும் கூட்டணி கட்சி அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதில் மாநில இணை பார்வையாளர் சுதாகர் ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் கலந்துகொண்டு பாஜக, அதிமுக வேட்பாளர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் செய்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு ஒன்றியத்தில் இருக்கும் ஒன்றிய கவுன்சில் வார்டு 1ல் போட்டியிடும் சேர்மதுரைக்கு தாமரை சின்னத்திற்கும், மாவட்ட கவுன்சில் 8 ல் போட்டியிடும் சொர்ணலதாக்கு இரட்டை இலை சின்னத்திற்கும் வாக்கு சேகரித்தனர்.

இதில் மாவட்ட தலைவர் ஆ. மகாராஜன், முன்னாள் மாவட்ட தலைவர் கட்டளை S.ஜோதி, களக்காடு ஒன்றிய தலைவர் ராமேஸ்வரன், களக்காடு நகர தலைவர் கணபதி ராமன், கந்தசாமி, கலைச்செல்வன், குகன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!