2ம் கட்ட தேர்தல்: வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பும் பனி துவக்கம்

நெல்லை மாவட்டத்தில் 2 ம் கட்ட தேர்தல் களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு வாக்குப்பெட்டி அனுப்பும் பணி துவங்கியது.

தமிழகத்தில் திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நாளை அக்டோபர் மாதம் 9ம் தேதி காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். இதற்காக நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி, களக்காடு, வள்ளியூர், ராதாபுரம் ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில் 3 லட்சத்து 25 ஆயிரத்து 823 பேர் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 567 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் 70 வாக்குச்சாவடிகள் பதட்டமான வாக்குச்சாவடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த இரண்டாம் கட்ட தேர்தலை ஒட்டி கூடுதல் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட 2000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள 567 வாக்குச்சாவடிகளுக்கு வாக்குப்பதிவின் போது தேவையான வாக்கு பதிவு பெட்டி, வேட்பாளர் அடங்கிய வாக்குச்சீட்டுகள், வாக்காளருக்கு வைக்க வேண்டிய மை மற்றும் தொற்று காலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டிய பொருட்கள் உள்ளிட்டவை இன்று அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி துவங்கியது. இதை ஒட்டி நாங்குநேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து நாங்குநேரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தேவையான வாக்குப்பதிவு பொருட்கள் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

Tags

Next Story