நெல்லை மாவட்டத்தில் சுற்றுலா தலங்களுக்கு நாளை முதல் அனுமதி
நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் சரணாலயத்திற்கு உட்பட்ட சுற்றுலா தலங்களான தலையணை, நம்பி கோயில் பகுதிக்கு செல்வதற்கு நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி
தமிழகத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தலையணை, நம்பி கோயில் பகுதிகளுக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு வனத்துறை முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவின்படி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் களக்காடு சரணாலயத்தில் உள்ள தலையணை சூழல் சுற்றுலா மையம் மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயிலுக்கு செல்வதற்கு நாளை முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என துணை இயக்குனர் ரமேஷ்வரன் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்:- களக்காடு தலையணை மற்றும் திருக்குறுங்குடி நம்பி கோயில் செல்லும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வரவேண்டும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும். சுற்றுலா தலங்களில் உணவுப் பொருட்கள் அனுமதிக்கப்படாது. காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் அனுமதி இல்லை.
விதிமுறைகளை மீறுபவர்களுக்கு குறைந்தபட்சம் 500 முதல் ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். அடுத்து மலை நம்பி கோயில் செல்வதற்கு செவ்வாய்க்கிழமை, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நான்கு நாட்கள் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu