நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டம்

நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டம்
X

நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மெண்ட் கூட்டம் நடைபெற்றது.

நெல்லை பர்கிட் நகர விமன் இந்தியா மூவ்மென்ட் செயற்குழு கூட்டத்தில் மகளிர் அணி பணிகள் குறித்து விரிவாக விவாதிக்க பட்டது.

விமன் இந்தியா மூவ்மென்ட் பர்கிட் மாநகர செயற்குழு கூட்டம் பர்கிட் மாநகர் அலுவலகத்தில் நகர தலைவர் நௌரோஸ் பானு தலைமையில் நடைபெற்றது.

செயலாளர் வஹிதா பானு வரவேற்புரை ஆற்றினார். நகர நிர்வாகிகள் செய்யது அலி பாத்திமா, அனீஸ் பாத்திமா, பசீரா, முன்னிலை வகித்தனர்,இந்த கூட்டத்தில் மகளிர் அணி பணிகள் விவாதிக்கப் பட்டது. சமூக நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநகர் மாவட்ட தலைவர் மஹ்மூதா ரினோஷா ஆலிமா, எஸ்.டி.பி.ஐ. கட்சி நெல்லை மாநகர் மாவட்ட பொதுச் செயலாளர் பர்கிட் அலாவுதீன் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்,

நிர்வாகிகள் ஜீனத், மீரா, அலிமா, பரக்கத் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியாக மற்றொரு செயலாளர் செய்யது அலி பாத்திமா நன்றியுரை ஆற்றினர்.

Tags

Next Story
agriculture and ai