பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய மாவட்ட காவல்துறை
X

image

பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 181 மற்றும் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும் நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தபட்டது.

பெண்கள் மற்றும் பொது மக்களுக்கு பெண்கள் பாதுகாப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கொரோனா தொடர்பான பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என காவல் துறையினருக்கு, மாவட்ட கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவிட்டிருந்தார். நாங்குநேரி பகுதியில் அமைந்துள்ள உள்ள TVS மில் நிறுவனத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், குற்றப் புலனாய்வு பிரிவு ஆய்வாளர் மகாலட்சுமி மற்றும் நெல்லை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு சிறப்பு பிரிவு ஆய்வாளர் மீரால் பானு ஆகியோர் கலந்துகொண்டு, நிறுவனத்தில் பணியாற்றும் இடத்தில் பெண்களுக்கு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு குறித்தும், போக்சோ சட்டம் பற்றியும், குழந்தை திருமணம் குறித்தும், காவலன் செயலியின் பயன்கள் குறித்தும், பெண்கள் பாதுகாப்பு இலவச தொலைபேசி எண் 181மற்றும் 1098 குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். மேலும் கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!