அழகியநம்பிராயர் கோவில் பங்குனி தேரோட்டம்

அழகியநம்பிராயர் கோவில் பங்குனி தேரோட்டம்
X

திருநெல்வேலி மாவட்டம் திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் கோயில் பங்குனித் தேரோட்டம் இன்று நடைபெற்றது.

108 வைணவத் தலங்களில் பிரசித்தி பெற்ற திருக்குறுங்குடி அழகியநம்பிராயர் இக்கோயிலில் பங்குனித் திருவிழா கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தினசரி சுவாமி பல்வேறு வாகனங்களில் உலா வரும் நிகழ்வு நடைபெற்றது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் 10ஆம் திருநாளான இன்று நடைபெற்றது. ராமானுஜ ஜீயர் சுவாமி வடம் பிடித்து தேரோட்டத்தை தொடக்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் ரத வீதிகளில் வலம் வந்து பின்னர் நிலைக்கு வந்தது.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!