அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபர் கைது: போலீஸார் அதிரடி

அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபர் கைது: போலீஸார் அதிரடி
X

பைல் படம்.

மூன்றடைப்பு அருகே அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

நெல்லை மாவட்டம், மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உதவி ஆய்வாளர் செல்வி சோபியா வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் மலையன்குளத்தை சேர்ந்த இசக்கிகுமார்(23), என்பவர் உரிய அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து உதவி ஆய்வாளர் அனுமதி சீட்டு இல்லாமல் மணல் ஏற்றி வந்த இசக்கிகுமாரை கைது செய்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!