காதல் விவகாரம் : 8 மாத குழந்தையை கொலை செய்த கொடூரம்

காதல் விவகாரம் : 8 மாத குழந்தையை கொலை செய்த கொடூரம்
X
நெல்லை மாவட்டம் திருக்குறுங்குடி அருகே மகிழடியில் காதல் விவகாரத்தில் 8 மாத குழந்தை வெட்டிக் கொலை.

மகிழடியை சேர்ந்த ஏஞ்சலின் நல்லதாம் வெளிநாட்டில் பணிபுரிவதால் அவரது 8 மாத குழந்தையை (அக்ஷ்யா குயின்) அவரது பெற்றோர்கள் ரசல்ராஜ் - எப்சிபாய் பெறுப்பில் விட்டு சென்றுள்ளார். அதே வீட்டில் அவரது தங்கை ரோஸ்பிளசி நர்சிங் பணி செய்து தங்கி வருகிறார். இவரை பணகுடி அருகே உள்ள ரோஸ்மியாபுரத்தை சேர்ந்த சிவாசங்காரம் என்பவர் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சிவா மகிழடியில் உள்ள ரசல்ராஜ் வீட்டிற்கு சென்று ரோஸ்பிளசியை திருமணம் செய்ய பெண் கேட்டதாக கூறப்படுகிறது. இதில் தகராறு ஏற்பட்டு ரசல்ராஜை சிவா வெட்ட முற்படும் போது, ரசல்ராஜ் குழந்தையை வைத்து தடுக்க முற்பட்டுள்ளார். அப்போது குழந்தை அக்ஷ்யாகுயின் மீது வெட்டு விழுந்ததில் சம்பவ இடத்திலேயே இறந்து போனது. சிவா அங்கிருந்து தப்பி சென்றுள்ளார். மேலும் ரசல்ராஜ்க்கும் காயம் ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!