மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் நூலகம் திறப்பு விழா

மூலைக்கரைப்பட்டி அரசு பள்ளியில் நூலகம் திறப்பு விழா
X

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.13.5 லட்சம் மதிப்பில் ரெகுபதி பண்ணையார் நினைவு நூலகம் திறக்கப்பட்டது.

மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 13.5 லட்சம் மதிப்பில் ரெகுபதி பண்ணையார் நினைவு நூலகம் திறக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் ரெகுபதி பண்ணையார் நினைவாக புதிதாக ஒரு நூலக கட்டடம் கட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த நூலகம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. நூலக திறப்பு விழாவுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர் அகஸ்டினா ஜெபராணி தலைமை வகித்தார். துணைத் தலைமை ஆசிரியர் அழகுலிங்கம் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ரெங்கநாதன் பண்ணையார் ரூ.13.5லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள நூலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து நூல்கள் பயன்கள் குறித்து சிறப்புரை ஆற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் மூலைக்கரைப்பட்டியை சேர்ந்த பானுமதி ரெகுபதி பண்ணையார், மோகன்ராம் பண்ணையார், குமாரசாமி பண்ணையார், ராதாகிருஷ்ணன் பண்ணையார், முன்னாள் பொற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கிருஷ்ணன், பொற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் சமூக இடைவெளியை கடைபிடித்து கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!