அரசு பள்ளி, கல்லூரி கொண்டு வருவேன்: பாளை அதிமுக வேட்பாளர்

அரசு பள்ளி, கல்லூரி கொண்டு வருவேன்: பாளை அதிமுக  வேட்பாளர்
X
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் என்று மனு தாக்கல் செய்தனர்.

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெரால்டு மற்றும் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.6ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இரண்டாவது நாளாக நேற்று வேட்புமனுத் தாக்கல் நடைபெற்று வருகிறது. நெல்லை மாவட்டத்தில் முதல் நாளில் ஐந்து தொகுதிகளிலும் சேர்த்து, மொத்தம் மூன்று பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளில் பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் ஜெரால்டு, தேர்தல் நடத்தும் அலுவலரும் நெல்லை மாநகராட்சி ஆணையருமான கண்ணனிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அதேபோல் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு தேர்தல் அலுவலர் குழந்தைசாமியிடம் அதிமுக வேட்பாளர் மனு தாக்கல் செய்தார். அவர்களுடன் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தொண்டர் நிர்வாகிகள் ஏராளமானோ் வந்திருந்தனர். தொடர்ந்து வேட்பாளர் ஜெரால்டு பத்ரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில், நான் பாளையங்கோட்டை தொகுதியிலையே பிறந்து வளர்ந்தவன். இளைஞன் என்பதால் தொகுதி மக்களுக்காக ஓடி ஆடி உழைப்பேன். இங்கு ஒரு அரசு மேல்நிலை பள்ளி கூட இல்லை. எனவே நான் வெற்றி பெற்றால் பாளையங்கோட்டை தொகுதிதியில் அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு கலைக்கல்லூரி கொண்டு வருவேன். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நான் இங்கு வெற்றி பெறுவேன் என்று கூறினார்.



Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!