நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர் பேரிடர் ஒத்திகை

நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர்    பேரிடர் ஒத்திகை
X
பேரிடர் மீட்பு ஒத்திகையில் தீயணைப்புத்துறையினர்.
நான்குநேரி ஜீயர் குளத்தில் தீயணைப்புத்துறையினர் பொதுமக்களுக்கு பேரிடர் ஒத்திகை செய்து காட்டினர்.

தென்மேற்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு துறையினர், தன்னார்வ அமைப்புகள் மற்றும் ரெட் கிராஸ் அமைப்பினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நெல்லை மாவட்ட தீயணைப்பு அலுவலரின் உத்தரவின் பேரில் நான்குநேரி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நான்குநேரி தீயணைப்பு நிலைய அலுவலர் பாபநாசம் தலைமையில் ஜீயர் குளத்தில் பேரிடர் ஒத்திகை நிகழ்ச்சியை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.

இதில் மழை மற்றும் ஆபத்து காலங்களில் நீர் நிலைகளில் மாட்டி தவிக்கும் பொதுமக்கள் தண்ணீரில் இருந்து எப்படி தப்பிப்பது. மேலும் கையில் கிடைத்த குடம், கேன் போன்ற பொருட்களை கொண்டு எவ்வாறு தப்பிக்கலாம் என்பது குறித்தும் செயல் விளக்கத்தை தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு செய்து காட்டினார்.

மேலும் பேரிடர் காலத்தில் என்னென்ன வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்க உரையாற்றினார். இதில் பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் கலந்துகொண்டனர்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு