பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.

காஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து பல்வேறு எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் மத்திய அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அவ்வகையில், நெல்லை மாவட்டம் நாங்குநேரியில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் இன்று நெல்லை கேடிசி நகர் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் கலந்து கொண்டார். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி வரும் மத்திய அரசை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர். மேலும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஸ் சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து தங்கள் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் பத்திரிகையாளர்களுக்கு கூறுகையில், ஏழை மக்கள்தான் பெட்ரோல், டீசலை அதிகம் பயன்படுத்துகின்றனர். ஆனால் மத்திய அரசு அவர்களை பற்றி கவலைப்படுவதில்லை விரைவில் ராகுல் காந்தி தலைமையில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என்றார்.

Tags

Next Story
ai marketing future