திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் பயிற்சி

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் பயிற்சி
X

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி நடைபெற்றது.

திருக்குறுங்குடியில் விவசாயிகளுக்கு வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து பயிற்சி நடைபெற்றது.

களக்காடு வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தொழில்நுட்ப மேலாண்மை முகமையின் கீழ் தோட்டகலை மலைப்பயிர்கள் துறையின் மூலம் வாழை நார் மதிப்பு கூட்டுதல் குறித்து விவசாயிகளுக்கு திருக்குறுங்குடியில் வைத்து பயிற்சி நடைபெற்றது.

களக்காடு வட்டாரத்தில் 2500 ஹெக்டர் பரப்பில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழை தார் அறுவடை செய்த பின் மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பமான வாழை மட்டை உலர வைத்து நார் எடுத்து மதிப்பு கூட்டிய கைவினைப் பொருட்கள் தயார் செய்வது குறித்து செயல் விளக்க பயிற்சி அளிக்கப்பட்டது. இப்பயிற்சி வுஏளு அறக்கட்டளை வளாகம் திருக்குறுங்குடி வட்டார மகளிர் விவசாயிகளுக்கும் , சுய உதவி குழு மகளிர்களுக்கும் அளிக்கப்பட்டது.

இப்பயிற்சியில் திருநெல்வேலி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் கஜேந்திர பாண்டியன் தலைமையேற்று பேசினார். உழவர் பயிற்சி நிலையத்தின் வேளாண்மை துணை இயக்குநர் டேவிட் டென்னிஷன் , வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் வசந்தி , தோட்டகலை உதவி இயக்குநர் திலீப் , துணை வேளாண்மை அலுவலர் காசி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். செய்யது அலி பாத்திமா மற்றும் வீரலெட்சுமி ஆகியோர் செயல் விளக்கப்பயிற்சி அளித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜாய் பத்ம தினேஷ் நன்றி கூறினார்.

இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் திரிசூலம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் செய்திருந்தார். இப்பயிற்சியில் 40 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!