முன்விரோதம் காரணமாக கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது
பைல் படம்.
முன்விரோதம் காரணமாக வீடு புகுந்து அவதூறாக பேசி, இருசக்கர வாகனத்தை சேதபடுத்தி, நகைகளை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ற 2 நபர்கள் கைதான வழக்கில் மேலும் ஒருவர் கைது.
நெல்லை மாவட்டம் சிவந்திபட்டி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட முத்தூர் பகுதியில் கோவில் கொடைவிழா நடந்து கொண்டிருந்தபோது அதே பகுதியைச் சேர்ந்த சுடலைக்கண்ணு, என்பவரின் மகன் பூபதி சுபாஷ் மற்றும் சுடலைகண்ணுவின் அக்கா மகன் சூரியா, சுந்தர் ஆகியோரிடம் சிவந்திபட்டி பகுதியை சேர்ந்த சுபாஷ், முத்தூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி(27), மற்றும் அவரது கூட்டாளிகள் தகராறு செய்துள்ளனர். இதனை சுடலைகண்ணு, சுபாஷ் அப்பாவிடம் சென்று கண்டிக்குமாறு கூறியுள்ளார்,
இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர் ஒன்று சேர்ந்து கம்பு மற்றும் கட்டையால் சுடலைமுத்து வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து அவதூறாக பேசி, ஜன்னல் மற்றும் கண்ணாடிகளை சேதப்படுத்தி வீட்டில் உள்ள இரு சக்கரவாகனத்தை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இதனை தடுக்க வந்த சுடலைகண்ணு மகன் மற்றும் அக்கா மகனைக் அடித்து காயம் ஏற்படுத்தியும், வீட்டில் வைத்திருந்த கோவில் பணம் ரூபாய் 2 லட்சத்தை எடுத்துக் கொண்டு செல்ல முயற்சி செய்யும் போது அதனை தடுக்க முயன்ற மாரியம்மாள் மற்றும் ஆறுமுகம் என்பவரின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க செயினை பறித்து கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து சுடலைமுத்து தம்பி புதியமுத்து (44), சிவந்திபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் காவல் ஆய்வாளர் சாந்தி விசாரணை மேற்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ற குற்றவாளிகளான சுப்பிரமணி, மற்றும் ஒருவர் ஆகிய இருவரை 14.07.2021 அன்று கைது செய்தார். மேற்படி இவ்வழக்கின் குற்றவாளியான கீழமுன்னீர்பள்ளத்தை சேர்ந்த வேல்முருகன்(21) என்பவரை காவல்துறையினர் இன்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu