மூன்றடைப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.

மூன்றடைப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி.
X
நெல்லை மாவட்டம் மூன்றடைப்பு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி காயம் அடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி பலியானார்.

மூன்றடைப்பை அடுத்துள்ள ஆயநேரி பைபாசில் கடந்த 9ஆம் தேதி சுமார் 29 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவரை அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக மூன்றடைப்பு போலீசாருக்கு தகவல் வந்ததையடுத்து

சம்பவ இடததிற்கு சென்ற போலீசார் காயமடைந்த அந்த நபரை மீட்டு பாளை., ஐக்கிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அந்த வாலிபர் ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அடையாளம தெரியாத வாகனத்தை தேடிவருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!