நெல்லையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

நெல்லையில் அமமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
X
அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற தீர்மானம்

நெல்லையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கழக வேட்பாளர் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என தீர்மானம்

திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளராக ஏ.பி.பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன் போட்டியிடுகிறார். இந்நிலையில் நெல்லை சட்டமன்ற தொகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளரும் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் ஏபி பாலகிருஷ்ணன் என்ற பால் கண்ணன் தலைமை தாங்கினார்.

வருகின்ற சட்டமன்ற தொகுதியில் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதி கழக வேட்பாளர் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். தொண்டர்கள் வீதி வீதியாக கிராமம் கிராமமாக சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. கூட்டத்தில் கழக மாநில அம்மா தொழிற்சங்க பேரவை பொருளாளர் நெல்லை பரமசிவம், அவைத்தலைவர் தாழை மீரான், பகுதி செயலாளர்கள் பேச்சிமுத்து, ஹைதர்அலி, ஸ்டார் ஐயப்பன், தேமுதிக, எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பல கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!