நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
X

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தச்சை-கணேசராஜா பரப்பாடியிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து வாக்குகள் சேகரித்தார்.

தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் பிரச்சாரம் தீவிரம் அடைந்து வருகிறது. இதில் நாங்குநேரி தெற்கு ஒன்றியம் பரப்பாடி பகுதியில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தச்சை-கணேசராஜாவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பரப்பாடி ஊரில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மேலும் அங்கிருந்த பொதுமக்களிடம் தேர்தல் அறிக்கைகளை எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!