அதிமுகவில் யாரும் முதல்வர் ஆகலாம்-முதல்வர் இபிஎஸ்

அதிமுகவில் யாரும் முதல்வர் ஆகலாம்-முதல்வர் இபிஎஸ்
X

அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வர் ஆகலாம் என நாங்குநேரியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தின் போது கூறினார்.

திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜாவிற்கு ஆதரவு கேட்டு நாங்குநேரி பஸ்ஸ்டாண்ட்டில் திறந்த வெளி வேனில் நின்றபடி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர், ஸ்டாலின் பொய்யை மூலதனமாக வைத்து பிரச்சாரம் செய்து வருகிறார். சொல்வதை செய்யவில்லை என்றால் அது பொய்தானே.

திமுக., குடும்ப ஆட்சி. கருணாநிதி இருந்தபோது அவர் கட்சி தலைவர் மற்றும் முதல்வர், தொடர்ந்து மகன் ஸ்டாலின் திமுக கட்சி தலைவர், தற்போது அவரது மகன் உதயநிதி. ஆனால் அதிமுகவில் அப்படி இல்லை. இங்கு சாதாரண தொண்டன் கூட முதல்வர் ஆகலாம் என்ற அவர் அதிமுக அரசு செய்த நலத்திட்ட உதவிகளை பட்டியலிட்டார்.இது போன்ற பல நல்ல திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்திட அதிமுகவை ஆதரியுங்கள் என பிரசாரம் செய்தார். இதில் முன்னாள் எம். பி., சவுந்தரராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். முதல்வர் வருகையை முன்னிட்டு அந்த பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!