நெல்லை நாங்குநேரி அதிமுக வேட்பாளர் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு

நெல்லை நாங்குநேரி அதிமுக வேட்பாளர்  வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு
X
நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்ட மன்றத்திற்கு அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கணேசராஜா வீதி, வீதியாக வாக்கு சேகரித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்

நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிஇல் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தச்சை கணேசராஜா நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டி பேரூராட்சி உட்பட்ட கிராம பகுதியில் வீதி வீதியாக சென்று வாக்கு சேகரித்தார். அப்பகுதி மக்களிடையே அதிமுக அரசு மக்களுக்கு செய்த பல்வேறு நல திட்டங்களை எடுத்துக்கூறியும், மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் மக்களுக்கு செய்படும் என்பது குறித்து கூறியும் வாக்கு சேகரித்தார்.

அப்போது வேட்பாளர் கணேசராஜா உடன் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிர் அணியை சேர்ந்தவர்கள் உடன் சென்றனர். பொதுமக்களுக்கு வாக்குறுதிகள் அடங்கிய நோட்டீஸ் வழங்கினர்.



Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்