நெல்லை-மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முத்து மனோ உடலை வாங்கி அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு.

நெல்லை-மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முத்து மனோ உடலை வாங்கி அடக்கம் செய்ய கிராம மக்கள் முடிவு.
X

 சிறையில்  கொல்லப்பட்ட முத்துமனோவின்  சொந்த கிராமமான வாகைகுளத்தில் சோகத்துடன் கூடியிருக்கும் பொதுமக்கள்.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி முத்துமனோ உடலை வாங்கி அடக்கம் செய்ய அவரது சொந்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.

மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் கொல்லப்பட்ட முத்து மனோ உடலை வாங்கி அடக்கம் செய்ய வாகைகுளம் கிராம மக்கள் முடிவு எடுத்துள்ளனர்.

நெல்லை பாளையங்கோட்டை சிறையில் கொலை செய்யப்பட்ட முத்துமனோ உடலை ஜூலை 2-ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குள் அவரது உறவினர்கள் அடக்கம் செய்ய வேண்டும். இல்லை என்றால் அன்று இரவு 7 மணிக்குள் மாவட்ட நிர்வாகம் உடலை அடக்கம் செய்ய வேண்டும் என மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து் சேரன்மகாதேவி சார் ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி. நாங்குநேரி துணை காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ லீசாஸ்டெபிலா தெரஸ் ஆகியோர் வாகைகுளம் கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிவில் கிராம மக்கள் நீதிமன்ற உத்தரவுப்படி நாளை (02:07:21)மதியம் ஒரு மணிக்குள் உடலை வாங்கி வாகை குளத்தில் அடக்கம் செய்வதாக தெரிவித்தனர். இதனையடுத்து 68 நாட்களாக நடைபெற்று வந்த கிராம மக்களின் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது .

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!