ஏர்வாடி-பாப்புலர் ப்ரண்ட்ஆஃப் இந்தியா-கொரோனா பேரிடர்உதவிமையம் திறப்பு.

ஏர்வாடி-பாப்புலர் ப்ரண்ட்ஆஃப் இந்தியா-கொரோனா பேரிடர்உதவிமையம் திறப்பு.
X

ஏர்வாடி காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் 

நோய் குறித்த விளக்கங்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெறுவதற்காக வேண்டி பிரத்தியேக உதவி எண் 94896 11948 செயல்பட்டு வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் கொரோனா பேரிடர் உதவி மையம் திறப்பு- பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் முஹைதீன் அப்துல் காதர் பங்கேற்பு

கொரோனா பேரிடர் உதவி மைய அலுவலக திறப்பு நிகழ்ச்சி இன்று காலை 9 மணியளவில் ஏர்வாடி, தெற்கு மெயின் ரோடு, லெப்பைவளவு பள்ளிவாசல் எதிரில் ஏர்வாடி காவல்துறை உதவி ஆய்வாளர் ராஜேந்திரன் அவர்கள் திறந்து வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் நெல்லை மாவட்டம் களக்காடு பிளாக் ஹெல்த் சூப்பர்வைசர் நம்பிராஜன் அவர்களும், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், மண்டல செயலாளர் அமீன், நெல்லை மாவட்ட செயலாளர் இம்ரான் அலி, ஏர்வாடி நகர தலைவர் அஷ்ரப் அலி, SDPI கட்சி நாங்குநேரி தொகுதி துணைத்தலைவர் மர்ஹபா ஷேக், SDPI கட்சி ஏர்வை நகர தலைவர் சேக் முகமது, CPC குழுமத்தின் தலைவர் ஆசாத் அவர்கள், லெப்பைவளவு ஜமாத் முத்தவல்லி உமர் பாரூக் அவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. மேலும் கொரானா நோய் குறித்த விழிப்புணர்வு பிரசுரமும் கபசுர குடிநீர் பொடிகளும் வழங்கப்பட்டன. இந்த சேவை மையத்தின் வாயிலாக மனநல ஆலோசனை வழங்குதல், தனிமை படுத்தியிருத்தல் குறித்த ஆலோசனைகள் (Self Quarantine), மருத்துவமனை வழிகாட்டுதல்கள், ஆம்புலன்ஸ் சேவைகள், ஆக்சிஜன் பல்ஸ் பரிசோதனை, கபசுர குடிநீர் பொடி விநியோகம், வைட்டமின் மாத்திரைகள், ஹோமியோபதி மருந்துகள், அரசு காப்பீடு திட்டம் குறித்த விளக்கங்கள், உடல் அடக்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

மேலும் பொதுமக்கள் நோய் குறித்த விளக்கங்களையும் மருத்துவ ஆலோசனைகளையும் பெறுவதற்காக வேண்டி பிரத்தியேக உதவி எண் 94896 11948 செயல்பட்டு வருகிறது.

Tags

Next Story
சாப்பிட கசப்பா தான் இருக்கும்..ஆனா  இதுல  A to Z எல்லாமே இருக்கு...! இன்றே சாப்பிடுவோமா..? | Pagarkai benefits in tamil