தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம்
X

தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்பி., தலைமையில் அனைத்து போலீசாருடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கை குறித்து திருநெல்வேலி மாவட்ட எஸ்பி, மணிவண்ணன் தலைமையில் டிஎஸ்பி.,கள் இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணாபுரத்தில் வைத்து நடைபெற்றது.அப்போது தேர்தல் நடைபெறும் அனைத்து வாக்குச் சாவடிகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் சட்டவிரோத செயல்கள் எதுவும் நடக்காத வண்ணம் ரோந்து பணி மேற்கொண்டு முக்கிய பகுதிகளை ஆய்வு செய்ய வேண்டும் எனவும், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்பவர்களை கைது செய்ய வேண்டும் எனவும் எல்லைப் பாதுகாப்பு படையினர் மூலம் கொடி அணிவகுப்பு பதற்றமான பகுதிகளில் நடத்தப்பட வேண்டும் எனவும் மேலும் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ள ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள், துணை ராணுவ வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினரக்கு தக்க ஆலோசனை வழங்க வேண்டுமெனவும் மாவட்ட எஸ்பி.,மணிவண்ணன் அறிவுரை வழங்கினார்.

Tags

Next Story
ai in future agriculture