தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
X
சட்டமன்ற தேர்தலுக்காக அந்தந்த தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் துவங்கியது.

திருநெல்வேலி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக அந்தந்த தொகுதிகளுக்கு வாக்கு இயந்திரங்களை கொண்டு செல்லும் பணிகள் துவங்கியது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை தொடர்ந்து திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய ஐந்து தொகுதி தேர்தலுக்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஐந்து சட்டமன்ற தொகுதிகளுக்கும் வாக்கு இயந்திரங்கள் ராமையன்பட்டி சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது.

வாக்கு இயந்திரங்களை அனைத்து தொகுதிகளுக்கும் கொண்டு செல்வதற்காக திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஷ்ணு இன்று ஆய்வு செய்து பணியினை தொடங்கி வைத்தார். தொடர்ந்து தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!