மேலப்பாளையம் கவுன்சிலர் நெல்லை மாநகராட்சி மேயருடன் சந்திப்பு

மேலப்பாளையம் கவுன்சிலர் நெல்லை மாநகராட்சி மேயருடன் சந்திப்பு
X
நெல்லை ‌மாநகராட்சி மேலப்பாளையம் கவுன்சிலரும்‌ மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவருமான கேஎஸ்ரசூல்மைதீன் மேயருடன் சந்திப்பு

நெல்லை ‌மாநகராட்சி மேலப்பாளையம் நமது 50வது வார்டு கவுன்சிலரும்‌ மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவருமான கே.எஸ்.ரசூல்மைதீன் இன்று 06.04.2022 திருநெல்வேலி மாநகராட்சி மேயர் சரவணனை சந்தித்து மேலப்பாளையம் VST பள்ளி முதல் அன்னை ஹாஜிரா கல்லூரி வரை மேடு பள்ளமாக மிக மோசமாக உள்ள சாலையை உடனடியாக சீரமைப்பு செய்து புதியசாலை அமைத்து தர கோரியும்,ஹாமீம்புரம், சித்திக், நகர், நேரு நகர், ஞானியார் அப்பா நகர் 7வது தெரு குடிநீர் தட்டுப்பாட்டை போக்க பல்வேறு இடங்களில் புதிய பீடர் மெயின் குழாய் விரைவாக அமைத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க கோரியும் மேலும் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட மேயர் அவர்கள் விரைவாக அனைத்தும் நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்

Next Story
ai healthcare products