தனியார் நிறுவனத்தில் திருடியவர் கைது!

தனியார் நிறுவனத்தில் திருடியவர் கைது!
X
திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் புகுந்து பூட்டை உடைத்து அங்குள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலியில் தனியார் நிறுவனத்தில் புகுந்து பூட்டை உடைத்து அங்குள்ள பொருட்களைத் திருடிச் சென்றுள்ள நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருநெல்வேலி அருகேயுள்ள கங்கைகொண்டான் மாசிலாமணிநகரைச் சேர்ந்தவர் ராம்குமார் சைமன். இவருக்கு கங்கைகொண்டான் சிப்காட்டில் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 9ம் தேதி தனது நிறுவனத்தைப் பூட்டிவிட்டு ஊருக்கு சென்றுள்ளார். திரும்பி வந்த பார்த்தபோது அந்த நிறுவன கட்டிடத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்ததுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது 3 கட்டிங் எந்திரங்கள். காப்பர் வயர் மற்றும் சில பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுகுறித்து புகாரைப் பெற்ற கங்கைகொண்டான் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் வெங்கடாச்சலபுரம் குத்தாலப்பேரி தெருவை சேர்ந்த முருகன் என்பவர் பொருட்களைத் திருடிச்சென்று மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதனால் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்குப் பிறகு திருடிய பொருட்களை காவல்துறையிடம் ஒப்படைத்தார்.

பாதுகாப்பு மிகுந்த பகுதியிலேயே இப்படி திருட்டு நடந்துள்ளது என நிறுவன உரிமையாளர் வருத்தமடைந்துள்ளார். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யும் முயற்சியில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!