திருநெல்வேலி மாநகராட்சியில் பாலிகிளினிக் திட்டத்தின் மூலம் சிறப்பு சிகிச்சைகள் துவக்கம்

திருநெல்வேலி மாநகராட்சியில் பாலிகிளினிக் திட்டத்தின் மூலம் சிறப்பு சிகிச்சைகள் துவக்கம்
X
திங்கள் முதல் சனிக்கிழமை வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.

தேசிய நகர்ப்புற சுகாதார இயக்க திட்டத்தின் (NUHM) கீழ் திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட, பேட்டை மற்றும் பாட்டப்பத்து நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒவ்வொரு வாரமும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை பாலிகிளினிக் திட்டத்தின் மூலம் பல்வேறு வகையான சிறப்பு மருத்துவர்களை கொண்டு சிறப்பு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

இதில் கீழ்க்கண்ட அட்டவணையில் உள்ளவாறு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான சிறப்பு மருத்துவர் மூலம் சிகிச்சைகள் வழங்கப்படுகிறது.


ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் பாலிகிளினிக் சிகிச்சை மையம் செயல்படாது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள சிறப்பு சிகிச்சையினை மாநகரப் பகுதியில் உள்ள பொது மக்கள் அனைவரும் பயன்படுத்தி கொள்ளுமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்