சட்டவிரோத தத்தெடுப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..

சட்டவிரோத தத்தெடுப்பு - நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..
X
பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுக்கும் கும்பல்.

சட்டவிரோத தத்தெடுப்பு என்பது பெரும்குற்றம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு எச்சரிக்கை விடுத்துள்ளார். இது குறித்த செய்திக்குறிப்பில் தற்போது பரவிவரும் covid-19 காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளை தத்தெடுத்து ஆதரவளிக்கும் படியும் உதவி செய்யும் படியும் வாட்ஸ்அப் மூலம் ஒரு தகவல் பரவி வருகின்றது.

இவ்வாறு குழந்தைகளை சட்டவிரோதமாக தத்தெடுப்பது இளைஞர் நீதி பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு சட்டம் 2015 இன் படி குற்றமாகும்

தத்தெடுத்து நடைமுறைகளைப் பின்பற்றாமல் குழந்தைகளை கொடுக்கவோ அல்லது பெறவோ செய்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதித்து தண்டிக்கப்படுவார்கள்.

இவ்வாறான செய்தியை வாட்ஸ்அப் குழுவிலோ அல்லது தனி நபர்களுக்கு இடையே பரப்புவதும் குற்றமாகும். சட்டரீதியாக தத்தெடுக்க விரும்புபவர்கள் www.cara.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

தத்தெடுப்பு தொடர்பாக ஆலோசனை பெற விரும்பினால் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு அல்லது சிறப்பு தத்துவத்தை தொடர்பு கொள்ளலாம். மேலும் பெற்றோர்கள் கொரோனால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு இருந்தாலோ அல்லது சிகிச்சை பலனின்றி இறப்பு நேரிட்டு இருந்தாலும் அவர்களது குழந்தைகளுக்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் பட்சத்தில் அந்த குழந்தைகளை அரசு அங்கீகாரம் பெற்ற குழந்தைகள் காப்பகத்தில் தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ பாதுகாத்திட குழந்தைகளை குழந்தைகள் நலக்குழு, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஆகிய அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம்

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள் சைல்டுலைன் 1098

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு 0462 -290 1953 - 255 1953

குழந்தைகள் நலக்குழு 0462- 232 1098 இதில் தொடர்பு கொள்ளலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தெரிவித்துள்ளார்

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!