நெல்லையில் பெய்த கனமழை: இடர்பாடுகளில் உதவிய பிரபாசங்கரி

கனமழையில் வெள்ளமாக ஓடும் நீரில், குப்பை அடைப்புகளை அப்புறப்படுத்தும் பணி.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்த காரணத்தால் கால்வாயில் பாய்ந்த வெள்ளநீர் கரையைத் தாண்டி அருகில் இருந்த நிலங்களுக்குள் புகுந்தது.
கன மழை காரணமாக மழை நீர் நெல்லை டவுண் முக்கிய கால்வாய் வழியாக நிரம்பி அப்பகுதியில் உள்ள சவுத் மவுண்ட்ரோடு, ரயில்வே பீடர்ரோடு, பாப்பா தெரு, மகிழ்வண்ணபுரம், செண்பகம் பிள்ளை தெரு, சிவா தெரு மற்றும் பல பகுதியில் உள்ள விடுகளில் மழை நீர் உள்ளே புகுந்தது.
அன்றைய தினம் அதிகாலையில் இரவு பெய்த மழையால் தெருவெங்கும் மழை நீர் சூழ்ந்திருந்தது. தகவல் அறிந்த திமுக மகளிரணி உறுப்பினர் பிரபாசங்கரி செய்த பணியை மக்கள் பாராட்டினர்.
அன்று அதிகாலையே பொதுப்பணித்துறை மற்றும் மாநகராட்சி உயர் அதிகாரிகளை தொடர்புகொண்டு போர்கால அடிப்படையில் விரைந்து வெள்ளநீரை அகற்றுமாறு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.
உடனடியாக 4 ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு அப்பகுதியில் இருந்த பிரதான கால்வாய் வாய்க்காலில் உள்ள அமலை செடிகள் மற்றும் குப்பைகள் முழு முயற்சியுடன் அகற்றப்பட்டது.
திமுக மகளிரணி உறுப்பினர் பிரபாசங்கரி
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்கள் தற்காலிகமாக பள்ளிகளில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டனர். அவர்கள் 500 பேருக்கான மதிய உணவு பிரபாசங்கரி ஏற்பாட்டில் வழங்கப்பட்டது, தக்க சமயத்தில் இவர் செய்த பணியை பொதுமக்கள் பாராட்டினர்.
திமுக மகளிரணி உறுப்பினர் பிரபாசங்கரி, இவர் நெல்லை மாநகராட்சி முன்னாள் துணை மேயர் S.விஸ்வநாதபாண்டியன் மருமகளும், நெல்லை மத்திய மாவட்ட திமுக விவசாய அணி அமைப்பாளா S.V. பொன்னையா பாண்டியன் மனைவியும் ஆவார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu