நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் அரையாண்டு தேர்வு தேதி அறிவிப்பு
X

கோப்புப்படம் 

கனமழை, வெள்ளத்தால் ஒத்திவைக்கப்பட்ட்ட தேர்வு ஜனவரி முதல் இரண்டு வாரங்களில் தேர்வு நடத்தப்படும் என அறிவிப்பு.

வங்கக்கடலில் நிலவிய கீழடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 17 மற்றும் 18ம்தேதி கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் திருநெல்வேலி மாவட்ட பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. குறிப்பாக தாமிரபரணி ஆறு ஓடும் பகுதிகள் மிகப்பெரிய அளவில் பாதிப்படைந்தன.

மழை நின்ற பிறகும் வெள்ளம் வடிய காலதாமதம் ஆனது. இதனால் பள்ளிகளுக்கு ஜனவரி மாதம் 1ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு ஜனவரி 4ம்தேதி முதல் 11ம்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், 6 முதல் 10-ம் வகுப்புகளுக்க ஜனவரி 4ம்தேதி முதல் 10ம்தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 4ம் தேதி அறிவியல், 6ம் தேதி கணக்கு தேர்வு, 9ம்தேதி சமூக அறிவியல் தேர்வு, 10ம் தேதி உடற்கல்வி தேர்வு நடத்தப்பட இருக்கிறது.

6 முதல் 12-ம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்தல் டிசம்பர் 7ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டு தேர்வு நடத்தப்பட்டது. கனமழை, வெள்ளம் காரணமாக தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

Tags

Next Story
வருச கணக்கில் குழந்தை இல்லையா...? இந்த பழத்தை சாப்பிட்டு பாருங்க...! அவ்ளோ பயன்...!