மாணவர்களுக்கு தனது ஒரு மாத ஊதியத்தில் விருந்து வைத்த அரசு பள்ளி ஆசிரியர்

மாணவர்களுக்கு  தனது ஒரு மாத ஊதியத்தில் விருந்து வைத்த அரசு பள்ளி ஆசிரியர்
X

பைல் படம்.

அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் ஓய்வு பெறுவதையொட்டி, அவர் பணியாற்றிய பள்ளி மாணவர்களுக்குத் தனது ஊதியத்தில் விருந்து வைத்துள்ளார்.

நெல்லை மாவட்டம், பாப்பாக்குடியை சேர்ந்தவர் செல்வமணி. இவர் சுத்தமல்லி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இன்னும் இரண்டு மாதங்களில் ஆசிரியர் செல்வமணி ஓய்வு பெற உள்ளார். இதை அடுத்து ஓய்வு பெறும் சமயம் கோடை விடுமுறை தொடங்கி விடும் என்பதால், முன்னதாகவே இன்று ஆசிரியர் செல்வமணி தனது ஓய்வை ஒட்டி பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு சிக்கன் பிரியாணி விருந்தளித்து அசத்தியுள்ளார்.

மேலும் ஆசிரியர் செல்வமணி 350 மாணவர்களுக்குத் தேர்வு எழுத பேர்டும் வாங்கி கொடுத்துள்ளார். இதற்காகத் தான் வாங்கும் ஒரு மாத சம்பளம் ரூபாய் 75000 செலவிட்டுள்ளார். ஓய்வு பெறும் சமயத்தில் ஆசிரியர் செல்வமணி மாணவர்கள் மீது அன்பு செலுத்தி, தனது ஒரு மாத சம்பளத்தை மாணவர்களுக்காகச் செலவிட்டது , மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடத்தில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!