திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்

திருநெல்வேலி மாவட்டத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம்
X

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்கள் குறைகளை தீர்க்க எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடைபெற உள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகர்வோர்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் ஏற்படும் குறைபாடுகள்ஃதடங்கல்கள் மற்றும் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகர்வோர்கள் தங்கள் குறைகளைப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக அனைத்து எண்ணெய் நிறுவன எரிவாயு முகவர்கள்,மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளர் மற்றும் எரிவாயு நுகர்வோர்கள் கலந்து கொள்ளும் எரிவாயு நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் 25.04.2022 திங்கள் அன்று பிற்பகல் 4.30 மணியளவில் திருநெல்வேலி, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் திருநெல்வேலி, மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.பெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. மேற்படி கூட்டத்தில் கலந்து கொண்டு எரிவாயு நுகர்வோர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலக தரப்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Next Story
future ai robot technology