கோடை விடுமுறையில் அறிவை விரிவு செய்ய வாய்ப்பு! நெல்லை மாணவர்களே!
பள்ளி மாணவர்கள் கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக கழிக்கும் வகையில் திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையம் கோடைகால அறிவியல் பயிற்சி முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் பள்ளி மாணவர்களுக்கு பயனுள்ள வகையில் பொழுதுபோக்கும் வாய்ப்புகள் கிடைக்க இருக்கின்றன.
வரும் மே 1ம் தேதி முதல் இந்த முகாம் துவங்க இருக்கிறது. இந்த முகாம் வரும் மே 13ம் தேதி வரை நடைபெறும். குறிப்பிட்ட நாள்களில் வெவ்வேறு பாடப்பிரிவுகளில் திட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வரும் மே 1 முதல் 6 ம் தேதி வரை மின்னணுவியல் பாடப் பிரிவில் 8ம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்றவர்களுக்காக முகாம் நடைபெறவுள்ளது. இந்த முகாம் காலை 10:30 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக வரும் மே 8ம் தேதி முதல் மே 13ம் தேதி வரை உயிர் அறிவியல் எனும் பிரிவில் 7 ம் வகுப்பு முதல் பதினொன்றாம் வகுப்பு வரை பயின்றவர்களுக்காக முகாம் நடைபெறவுள்ளது. இது காலை 10:30 மணிக்கு துவங்கி மதியம் 12. 30 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நாட்களில் மதியம் 1:30 மணி முதல் 03.30 மணி வரை STEM என்னும் பிரிவில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயின்றவர்களுக்காகவும், மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை வானவியல் என்ற பிரிவில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயின்றவர்களுக்கும் நடத்த திட்டமிட்டுள்ளது.
பயிற்சி கட்டணம்
ஒரு நபர் ஒன்றுக்கு மேற்பட்ட பயிற்சி பிரிவுகளிலும் பங்கேற்கலாம். இதற்கான பயிற்சி கட்டணமாக ஒவ்வொரு பிரிவிற்கும் நபர் ஒன்றுக்கு ரூ.600.00 மின்னணுவியலுக்கு ரூ.800.00 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை மற்றும் பிற விவரங்களுக்கு
ஒவ்வொரு பிரிவிற்கும் குறிப்பிட்ட இடங்களே அனுமதிக்கப்படுவதால் முதலில் வருபவருக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சி முடிவில் சான்றிதழ் அனைவருக்கும் வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை அறிவியல் மையத்தில் பெற்றுக் கொள்ளலாம் மேலும் விவரங்கள் அறிய sciencentrenellaiednprog@gmail.com மற்றும் 94429 94797 என்ற whatsapp எண்ணை அணுகவும் என அதன் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu