வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது

வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பதவியை திமுக கைப்பற்றியது.

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றியத்தில் 17 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 12 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் ஒன்றியக்குழு தலைவர் பதவிக்கு வருகிறது.

திமுக கூட்டணியில் இந்திய தேசிய காங்கிரஸ் இரண்டு இடங்களை கைப்பற்றியுள்ளது. அதிமுக, பிஜேபி, சுயேச்சை ஆகியவை தலா ஒரு இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

3வது வார்டு பொன்குமார், நாலாவது வார்டு டெய்சி ஒபிலியா, 5வது வார்டு தாய் செல்வி, ஆறாவது வார்டு அலெக்ஸ் பால் கோசின், 8வது வார்டு திவாகரன், ஒன்பதாவது வார்டு சேவியர் செல்வராஜா, 10வது வார்டு ஜெயா, 11வது வார்டு மகாலட்சுமி ,12வது வார்டு மல்லிகா, 13 வது வார்டு பாண்டித்துரை, 16வது வார்டு அனிதா, 17வது வார்டு அஜெந்தா ஆகியோர் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் 2 வது வார்டில் பிளிப்ஸ், 7வது வார்டில் வெங்கடேஷ் தன்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். அதிமுக சார்பில் 14 வது வார்டில் போட்டியிட்ட சாரதா, பிஜேபி சார்பில் 15 வது வார்டில் போட்டியிட்ட ஜெயலட்சுமி, சுயேச்சை வேட்பாளராக 1-வது வார்டில் களம் கண்ட செய்யது ஜாவித் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!