மானூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது

மானூர் ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் 25 ஒன்றிய கவுன்சிலர் பதவிகள் உள்ளது. இதில் திமுக 17 இடங்களில் தனித்து வெற்றி பெற்று சேர்மன் பதவியை கைப்பற்றியது.

ஐந்து இடங்களில் சுயேட்சை வேட்பாளர்கள் கைப்பற்றினர். இரண்டு இடங்களை அதிமுக கைப்பற்றியது. பிஜேபி ஒரு இடத்தை கைப்பற்றியுள்ளது

ஒண்ணாவது வார்டு மல்லிகா, 3வது வார்டு சுதாராணி, ஆறாவது வார்டு சண்முகசுந்தரி, ஒன்பதாவது வார்டு கலைச்செல்வி, 11வது வார்டு நிஷா, 12வது வார்டு சின்னத்துரை, 13வது வார்டு இன்பராஜ், 16வது வார்டு சுரேஷ், 17வது வார்டு சுகந்தா தேவி, 18-வது வார்டு நயினார் முகம்மது, 19வது வார்டு ஸ்ரீலேகா, 20 வது வார்டு பாச குமாரி, 21வது வார்டு மாரி பிரியா, 22வது வார்டு முத்துமாரி, 23வது வார்டு தேவி முப்பிடாதி, 24வது வார்டு முகமது காசிம், 25வது வார்டு முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் திமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

இரண்டாவது வார்டு முத்துப்பாண்டி, நாலாவது வார்டு உடையமை, 5-ஆவது வார்டு உமாதேவி, ஏழாவது வார்டு ஜெனட், 15வது வார்டு மாலதி ஆகியோர் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.

8வது வார்டு கோபாலகிருஷ்ணன், 14வது வார்டு உச்சி மாகாளி ஆகியோர் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 10வது வார்டு பால் முருகன் பிஜேபி சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil