பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது

பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை திமுக கைப்பற்றியது
X

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை திமுக கைப்பற்றியது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 14 ஒன்றிய கவுன்சிலர் பதவி உள்ளது. இதில் போட்டியிட்ட திமுக ஒன்பது இடங்களில் தனித்து வெற்றி பெற்றுள்ளது. திமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்திலும், அதிமுக ஒரு இடத்திலும், சுயேட்சை வேட்பாளர் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்த ஊராட்சி ஒன்றியத்தில் 12-வார்டுக்கான முடிவு இதுவரை அறிவிக்கப்படவில்லை இந்த நிலையில் திமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் தனிப்பெரும்பான்மையுடன் பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய சேர்மன் பதவியை கைப்பற்றியுள்ளது.

3வது வார்டு குமரேசன், நாலாவது வார்டு திருப்பதி, அஞ்சாவது வார்டு தெய்வானை, ஆறாவது வார்டு தங்கபாண்டியன், ஏழாவது வார்டு பகவதி ,எட்டாவது வார்டு ராஜாராம், 10வது வார்டு ராமகிருஷ்ணன், 13-வார்டு நம்பிராஜன், 13வது வார்டு ராமலட்சுமி 14வது வார்டு பூவம்மாள் ஆகியோர் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றிப் பெற்றனர்.

அதிமுக சார்பாக 1வது வார்டில் போட்டியிட்ட முத்துக்குமார் வெற்றி பெற்றார். திமுக கூட்டணியில் 2-வது வார்டில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தெய்வானை வெற்றி பெற்றார். 9வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட சரஸ்வதி வெற்றி பெற்றார். 12வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கான முடிவுகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!