/* */

காவல்துறை அனுமதி மறுப்பு - காந்தி சிலையிடம் மனு அளித்த காங்கிரஸார்

திருநெல்வேலி காங்கிரஸ் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டநிலையில் அதே பகுதி தச்சநல்லூர் காந்தி சிலையிடம் காங்கிரஸார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

காவல்துறை அனுமதி மறுப்பு - காந்தி சிலையிடம் மனு அளித்த காங்கிரஸார்
X

திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் 

போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுப்பு - காந்தி சிலையிடம் மனு அளித்த காங்கிரஸார்

நெல்லை தச்சநல்லூரில் இன்று பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் சார்பில் நடக்கவிருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் அதே பகுதி தச்சநல்லூர் காந்தி சிலையிடம் காங்கிரஸார் மனு அளித்தனர்.

திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் இன்று பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருநெல்வேலி தச்சநல்லூர் காந்தி சிலையில் இருந்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் காமராஜர் சிலை வரை சைக்கிள் பேரணி நடைபெற இருந்தது.

இது தொடர்பாக அனுமதி வேண்டி காவல்துறையிடம் கடந்த 6 ஆம் தேதி அனுமதி கோரியிருந்தார். இதுகுறித்து காவல்துறை மனுவை பரிசீலித்து அவர்களுக்கு திரும்ப அனுப்பப்பட்ட மனுவில் தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு மத்திய மாநில அரசுகளால் வைரஸ் பரவல் தடுப்பு நெறி முறைகள் விதிக்கப்பட்டு அமலில் இருந்து வருகிறது.

மேலும் தற்சமயம் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது அதனால் தாங்கள் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு விலைகள் காந்தி சிலை முன்பு இருந்து சந்திப்பு காமராஜ் சிலை வரை நடத்த உத்தேசித்துள்ள சைக்கிள் பேரணி போரட்டத்திற்கு காவல்துறை மறுக்கப்படுகிறது என தெரிவித்துள்ளனர்.


இதனை அடுத்து திருநெல்வேலி மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் சைக்கிளில் சென்று அதே பகுதியில் உள்ள காந்தி சிலைக்கு அந்த மனு அளித்தனர்.

Updated On: 12 July 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு