திருநெல்வேலி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு

திருநெல்வேலி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு
X

மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணுசந்திரன் 

திருநெல்வேலி மாநகராட்சி சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது

திருநெல்வேலி மாநகராட்சி சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் நாளை ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் இருக்காது

திருநெல்வேலி மாநகராட்சி சுத்தமல்லி தலைமை நீரேற்று நிலையத்தில் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுவதால் தச்சை மண்டலம், வார்டு 3,8, 9 மற்றும் 10-ல் உள்ள பகுதிகளுக்கு நாளை (21.07.2021) 'ஒரு நாள் மட்டும்" குடிநீர் விநியோகம் நிறுத்தம் என திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் பா.விஷ்ணு சந்திரன் தெரிவித்து்ள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லூர் மண்டலம், வார்டு எண்: 3, 8, 9, 10(பகுதி)ஆகிய பகுதிகளுக்கு சுத்தமல்லி புதிய தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீர் பம்பிங் செய்யப்பட்டு வருகின்றது. மேற்படி, பிரதான குழாய்; இராமையன்பட்டி, கண்டியபேரி, பழையபேட்டை இணைப்பு சாலை வழியாக செல்லும் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே பம்பிங் செய்யப்படும் பிரதான குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்புகளை சரிசெய்யும் பணி நடைபெற வருகிறது.

எனவே, தச்சநல்லூர் மண்டலம், வார்டு எண்: 3, 8, 9 மற்றும் 10 (பகுதி)ஆகிய பகுதிகளுக்கு இன்று (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் குடிநீர் விநியோகம் வழங்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே, பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்