நெல்லையில் தியாகராஜ பாகவதரின் பிறந்தநாள் விழா

திருநெல்வேலி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதரின் 112வது பிறந்தநாள் விழாவை பெரியவர் பக்தவத்சலம் அறக்கட்டளை மற்றும் தமிழ் முழக்கப் பேரவை இணைந்து கொண்டாடினர்.
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியை ( பொறுப்பு ) செல்வமுத்துகுமாரி அறிமுக உரை செய்தார், பெரியவர் பக்தவத்சலம் அறக்கட்டளை நிறுவுனரும் முன்னாள் துணைஆட்சியருமான ச.சுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் A.இராஜகிளி விழாவிற்கு தலைமை ஏற்று தியாகராஜ பாகவதரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதையை செய்து சிறப்புரையாற்றினார். அவரது உரையில் பாகவதரின் வாழ்வில் நடைபெற்ற சம்பவங்கள் பலவற்றை மேற்கோள் காட்டி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
நிலா இலக்கிய வட்டம் பொறுப்பாளர் ந.இராஜகோபால் (முன்னாள் மாவட்ட பதிவாளர்), பெரியவர் பக்த்தவத்சலம் அறக்கட்டளை புரவலர் ஆ.கந்தசாமி, திருக்குறள் பிரபா, நிலா இலக்கிய சங்கம் பொருளாளர் நசீர், பொருணை மைந்தன் ந.காஜாமைதீன் தமிழ் முழக்கப் பேரவை பொருளாளர் சு.சண்முகவேலன் ஆகியோர் வாழ்த்துரை செய்தனர். தேசிய நல்லாசிரியர் முனைவர் சு.செல்லப்பா புகழுரை ஆற்றினார். கவிஞர் சுப்பையா , பாளை தங்கவேல், வண்ணை நாகராஜன், உட்பட தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து இசைப்பள்ளி மாணவர்கள் மங்கள இசை நிகழ்ச்சி நடத்தி பாகவதருக்கு மரியாதை செய்தனர். வயலின் ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu