பறவைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பேரணி

பறவைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பேரணி
X

திருநெல்வேலியில் பறவைகள் பாதுகாப்பை வலியுறுத்தி சைக்கிள் பேரணி நடைபெற்றது.

பறவைகள் மற்றும் அதன் வாழ்விட பாதுகாப்பை வலியுறுத்தி அகத்தியமலை மக்கள்சார் இயற்கைவள காப்பு மையம், தின்னவேலி ரோட்டரி சங்கம், நெல்லை இயற்கைச் சங்கம், நெல்லை மிதி வண்டி சங்கம் மற்றும் அரும்புகள் அறக்கட்டளை இணைந்து சைக்கிள் பேரணி இன்று நடைபெற்றது. சுமார் 18 கி.மீ. தொலைவு கொண்ட இப்பேரணியானது நயினார் குளத்தில் தொடங்கி, இராஜவள்ளிபுரம், பாலாமடை வழியாக கல்குறிச்சி குளத்தில் முடிவடைந்தது.

பேரணியில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார், பேரணியை நிர்வாக பொறியாளர் அண்ணாதுரை, தொடங்கி வைத்தார். தாமிரபரணி பாசனக் குளங்களில் காணப்படும் பறவைகளின் புகைப்படங்கள் அடங்கிய பலகை நான்கு குளங்களிலும் நடப்பட்டன். பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கு பறவைகள் நோக்கல் சிறப்பு நிகழ்சி நடத்தப்பட்டது. பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஏட்ரி நிறுவனத்தின் பேட்ரிக் டேவிட், மரிய ஆண்டனி, சரவணன், தளவாய் பாண்டி மற்றும் வினோத் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story
இது தெரியாம போச்சே ,காலை எழுந்து வெந்நீர் பருகுவதால் இவ்வளவு நன்மைகள் இருக்கா