பத்ம விருதுகள் 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம்-மாவட்ட ஆட்சியர்
பத்ம விருதுகள் 2021
பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என நெல்லை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
பத்ம விருதுகளுக்கு 2021 செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. 2022-ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படவிருக்கும் பத்ம விருதுகளுக்கான இணையவழி விண்ணப்பங்கள்/பரிந்துரைகளை 2021 செப்டம்பர் 15 வரை அனுப்பலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை https://padmaawards.gov.in எனும் தளம் வழியாக மட்டுமே அனுப்பமுடியும்.
1954 - ம் ஆண்டு உருவாக்கப்பட்ட நாட்டின் உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்ம ஸ்ரீ ஆகியவை ஒவ்வொரு வருடமும் குடியரசு தினத்தன்று அறிவிக்கப்படுகின்றன. கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, அறிவியல் மற்றும் பொறியியல், பொது விவகாரங்கள், குடிமை சேவை, வர்த்தகம் மற்றும் தொழில்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைகள்/சேவைக்காக இவை வழங்கப்படுகின்றன.
இது தொடர்பாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் திருநெல்வேலி மாவட்ட பிரிவு சார்பில் பத்ம விருதுகளுக்கான விண்ணப்பங்கள் கோரி விளையாட்டு வீரர்களுக்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாட்டில் கல்வி கலை வணிகம் மற்றும் தொழில் இலக்கியம் விளையாட்டு மருத்துவம் சமூக நலன் பொது நலத் துறை ஆகிய ஏதேனும் ஒரு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு பத்ம விருதுகள் விருதுகள் வழங்கப்படுகிறது.
இந்த விருதானது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 26 ம் தேதி குடியரசு தின விழா அன்று இந்திய ஜனாதிபதியால் ராஷ்டிரபதி பவன் புது டெல்லியில் வழங்கப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் விளையாட்டில் சாதனை படைத்தவர்கள் இந்த விருதுக்கான இணையதள முகவரி https://padmaawards.gov.in இதன் மூலம் வரும் 15-09- 2020 ஆம் தேதிக்குள் மட்டுமே விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க இயலும் என்ற விபரத்தினை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேலும் விவரங்களுக்கு 0462 257 2632 என்ற மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலக எண்ணை தொடர்பு கொள்ளவும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் வே.விஷ்ணு தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu