கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மகளிர் தின விழா காெண்டாட்டம்

கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மகளிர் தின விழா காெண்டாட்டம்
X

கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

உலக மகளிர் தினத்தை ஒட்டி கிராம உதயம் சார்பில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் வழங்குதல் மற்றும் நடும் விழா நடைபெற்றது.

நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் சார்பில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு நெல்லை மாவட்டம் கோபாலசமுத்திரம் கிராம உதயம் தலைமை அலுவலகத்தில் வைத்து 5000 மரக்கன்றுகள் வழங்குதல், நடுதல் மற்றும் பராமரித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு கிராம உதயம் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுந்தரேசன் தலைமை தாங்கி மரக்கன்றுகள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கிராம உதயம் நிர்வாக மேலாளர் மகேஷ்வரி முன்னிலை வகித்தார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் ஜெபமணி வரவேற்புரை வழங்கினார். கிராம உதயம் பகுதி பொறுப்பாளர் மீனாட்சி, ஆறுமுகத்தாய், புவனேஸ்வரி ஆகியோர் கருத்துரை ஆற்றினர். கிராம உதயம் தன்னார்வ தொண்டர் பேச்சியம்மாள் நன்றியுரை வழங்கினார்.

நிகழ்வில் கலந்து கொண்ட‌ கிராம உதயம் தன்னார்வ தொண்டர்கள், கிராம உதயம் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil