டெல்லியில் பெண் காவலர் பாலியல் படுகொலையை கண்டித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்
விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக டெல்லி காவல் துறையில் பணியாற்றிய சபியா கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கல்லிடைகுறிச்சியில் ஆர்ப்பாட்டம்
நெல்லை புற நகர் மாவட்டம் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக டெல்லி காவல் துறையில் பணியாற்றிய சபியா கூட்டு கற்பழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதை கண்டித்து கல்லிடைகுறிச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விமன்ஸ் இந்தியா முமெண்ட் மாவட்ட துணை தலைவர் பீர் பாத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஷம்ஷாத்து வரவேற்புரையாற்றினர்,
மேலும் வீரை ஷாஜிதா தொகுத்து வழங்கினார். கண்டன உரையாற்றிய நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில துணை தலைவர் சகோதரி ஆயிஷா நிஷரா, மற்றும் விமன்ஸ் இந்தியா முவ்மெண்ட் புறநகர் மாவட்ட பொது செயலாளர் நூஸ்ரத், எஸ்டிபிஐ கட்சி புறநகர் மாவட்ட தலைவர் எம்.கே பீர்மஸ்தான், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞ்ர் முகம்மது ஷபி, காங்கிரஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அணி செல்வராஜ் ஆகியோர் உரையாற்றினர்.
மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் விமன்ஸ் இந்தியா முமெண்ட் நிர்வாகிகள், புறநகர் மாவட்ட செயலாளர் கல்லிடை சுலைமான், தொகுதி தலைவர் சேரை அபூபக்கர், நகர தலைவர் நூர்தீன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
சபீயாவுக்கு நீதி வேண்டி, குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்க கோரி மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டனர். இறுதியில் சகினா நன்றிகூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu