நெல்லை அருகே அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்த இருவர் கைது
பைல் படம்.
நெல்லை மாவட்டம், முக்கூடல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிங்கம்பாறையை சேர்ந்த ஜான்கென்னடி(40), என்பவர் வம்பழந்தான் பகுதியில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது ஹோட்டலுக்கு 21.08.2021 அன்று வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த ஆனைக்குட்டி என்ற மணிகண்டன்(20), மற்றும் அவரது நண்பர்களுடன் சாப்பிட வந்துள்ளனர்.
அப்போது கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்களுக்கு சாப்பாடு கொடுப்பதற்கு தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், ஜான் கென்னடியை அரிவாளால் வெட்ட வரும் போது அங்கு வேலை செய்த சகாயபிரவின் தடுத்துள்ளார். இதில் சகாயபிரவினின் தலை மற்றும் கையில் அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்து தப்பிச் சென்றுவிட்டனர்.
இதுகுறித்து ஜான்கென்னடி முக்கூடல் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் சுத்தமல்லி குற்றப்பிரிவு ஆய்வாளர் அனிதா (பொறுப்பு) விசாரணை நடத்தினார்.
விசாரணையில் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஆனைக்குட்டி என்ற மணிகண்டன்(20) மற்றும் இசக்கி பாண்டி என்ற கார்த்திக்(21), ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu