/* */

நெல்லை:வேளாண்மையில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி

பயிர்களில் பாதிப்பை உண்டாக்கும் பூச்சி மற்றும் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில் நுட்ப பயிற்சி விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டன.

HIGHLIGHTS

நெல்லை:வேளாண்மையில்  பூச்சி மற்றும் நோய் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி
X

ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்டம், சேரன்மகாதேவி வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் வேளாண் தொழில் நுட்ப மேலாண்மை முகமையின் சார்பில், பத்தமடை கிராமத்தில் ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை தொழில்நுட்பம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

நெல்லை மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (மத்திய திட்டம்) முனைவர் சுந்தர் டேனியல் பாலஸ் தலைமையேற்று, பயிர்களில் பாதிப்பை உண்டாக்கும் பூச்சி மற்றும் நோயினை இயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில் நுட்பம் குறித்து பேசினார். சேரன்மகாதேவி வட்டார வேளாண் உதவி இயக்குநர் கற்பகராஜ் குமார் பங்கேற்று, நுண்ணீர் பாசனத்தின் முக்கியத்துவம், தரிசு நில மேம்பாடு திட்டம், திருந்திய நெல் சாகுபடி குறித்து விளக்கி பேசினார்.

நெல் மற்றும் வாழையில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை முறைகள் குறித்தும், ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்தும் விரிவாக விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இப்பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் கலா செய்திருந்தார்.இப்பயிற்சியில் 50க்கும் மேற்ப்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Updated On: 23 July 2021 1:09 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்