நெல்லை, தென்காசியில் தொடர் மழை: அணைகள் நீர்மட்டம் சீராக உயர்வு.

நெல்லை, தென்காசியில் தொடர் மழை:  அணைகள் நீர்மட்டம் சீராக உயர்வு.
X

நெல்லை மாவட்டத்தின் பிரதான பாபநாசம் அணை

நெல்லை, தென்காசியில் விடிய விடிய மழை- பாபநாசம் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 129 அடியாக உள்ளது.

நெல்லை, தென்காசியில் விடிய விடிய மழை பெய்து வரும் நிலையில் பாபநாசம் அணை நீர்மட்டம் நேற்று 119 அடியாக இருந்த தண்ணீரின் அளவு இன்று 129 அடியாக உயர்ந்துள்ளது ஒரே நாளில்ஒரே நாளில் 10 அடி உயர்ந்துள்ளது.

காலத்தின் மாற்றத்தால் வழக்கம் போல சாலைகளில் நடாமாட முடியாத படி மே மாதம் அக்னி நட்சத்திர வெயில் சுட்டெரிப்பது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மழை காலம் போல தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.தொடக்கத்தில் வெப்ப சலனம் காரணமாக பெய்த மழை, தற்போது புயல் சின்னம் காரணமாகவும், தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய வாய்ப்பு இருப்பதன் காரணமாகவும் கூடுதலாக பெய்து வருகிறது.யாஸ் புயல் கரையை கடந்த நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து சாரல் மழை பெய்து வருகிறது.

கொடுமுடியாறு, நம்பியாறு பகுதியில் இன்று வரை மழை தொடர்ந்து பெய்து வருவதால் நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது.செங்கோட்டை அடவிநயினார் அணை பகுதியிலும் கனமழை பெய்ததால் அடவிநயினார் அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.பாபநாசம் அணையில் வழக்கமாக கோடை காலம் மிகவும் குறைவாகவே நீர்மட்டம் இருக்கும். கடந்த 2020-ம் ஆண்டு 39 அடியும், 2019-ம் ஆண்டு 47 அடியும் நீர்மட்டம் இருந்தது. இந்த ஆண்டு மழை காலம் போல நீர்மட்டம் சீராக அதிகரித்து வந்தது.

நேற்று பாபநாசம் அணையில119.69 அடி நீர்மட்டம் இருந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 10 அடி உயர்ந்து இன்று காலை 129.24 (10.01%) அடியாக உள்ளது. மே மாதம் கோடை காலத்தில் பாபநாசம் அணை நீர்மட்டம் இதுவரை இந்த அளவு உயர்ந்தது இல்லை.சேர்வலாறு அணையில் நேற்று நீர்மட்டம் 135.30 அடி யாக இருந்தது. ஒரே நாளில் 10 அடி உயர்ந்து இன்று 151.41(19.84%) அடியாக உள்ளது.

மணிமுத்தாறு அணைக்கு குறைந்த அளவு தண்ணீரே வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து நேற்று 84.10 அடி இருந்த நிலையில் இன்று3.90 (5.33%) அடி உயர்ந்து 88 அடியாக உள்ளது.கொடுமுடியாறு அணை நீர்மட்டம் நேற்று 22 அடியாக இருந்தது. ஒரே நாளில் நீர்மட்டம் 5.25 (7.0%)அடி உயர்ந்து 27.25 இன்று அடியாக உயர்ந்துள்ளது

தொடர்மழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மெயின் அருவி, ஐந்தருவியில், குளிக்க முடியாத அளவிற்கு தண்ணீர் வெள்ளமாக சீறிப்பாய்கிறது. பழைய குற்றால அருவியிலும் ஏராளமான தண்ணீர் விழுகிறது. தற்போது சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லாததால் அருவிப்பகுதிக்கு பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!