மக்களின் குடிநீர் தேவை மற்றும் பாசன வசதிக்காக பாபநாசம் அணை திறக்கப்பட்டது
திருநெல்வேலி மாவட்ட மக்களின் குடிநீர் தேவை மற்றும் பாசன வசதிக்காக இன்று காலை பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கபட்டது.
நெல்லை மாவட்டத்தின் பிரதான அணைகளான பாபநாசம், சேர்வலார், மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து இன்று முதல் கார் சாகுபாடி ஆயத்த பணிகளுக்கு இன்று முதல் வரும் 15-10-2021 வரை தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவின் பேரில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் தமிழக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.
நெல்லை மாவட்ட பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின் தாமிரபரணி பாசன அமைப்பில் உள்ள நேரடி மற்றும் மறைமுக பாசனப் பகுதிகளுக்கு கார் பருவ சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடுமாறு நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களின் விவசாய பெருமக்களிடம் இருந்து தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் அனுப்பபட்டது. அதன்படி தமிழக அரசு உத்தரவு படி இன்று கார் சாகுபடிக்கான ஆயத்த பணிகளுக்கான நாற்று பரவுதல்,நடுவை உள்ளிட்ட பணிகளுக்கு இன்று முதல் வரும் 15 -10-21 ம் தேதி வரை 137 நாட்களுக்கு தினம் நீர் இருப்பு மற்றும் வரத்தை பொறுத்து 14000 கன அடி தண்ணீர் விடப்படுகிறது..
இதனால், நெல்லை மாவட்டத்தில் வடக்கு கோடை மேலழகியான் கால்வாய், தெற்கு கோடை மேலழகியான் கால்வாய் நதியுண்ணி கால்வாய், கன்னடியன் கால்வாய் மற்றும் பாளையங்கால்வாய் ஆகிய பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் நேரடி மற்றும் மறைமுகமாக 75078 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் .அரசு உத்தரவு படி15-10-21 ம் தேதி வரை திறந்து விடப்படும்.
நிகழ்ச்சியில் ஞானதிரவியம், முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், பாளையங்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் அப்துல் வகாப், பொதுபணித்துறை செயற்பொறியாளர் ,மின்வாரிய பொறியாளர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu