நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
X

பட விளக்கம்: காரையாறு அணை கோப்பு படம்.

நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம் குறித்த விவரங்கள்

நெல்லை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் இருப்பு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

*நெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (19-01-2024)*

பாபநாசம் :

பாபநாசம் அணை, தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலியிலிருந்து சுமார் 50 கிமீ தொலைவில் உள்ளது. இது திருநெல்வேலி மாவட்டத்தின் ஒரு முக்கிய அணையாகும். இந்த அணையில் 143 அடிவரை நீரைத் தேக்க இயலும். அணையின் கொள்ளளவு 5,500 மில்லியன் கனஅடி. பாபநாசம் மலையில் ஆங்கிலேயர் காலத்தில் 1942 இல் இந்த அணை கட்டப்பட்டது. இவ்வணையிலிருந்து திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் தாமிரபரணி ஆறு பாய்கிறது. இதன் மூலம் இவ்விரு மாவட்டங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் விருதுநகர் ,தென்காசி மாவட்டங்களின் ஆண்டு முழுவதுக்குமான குடிநீர் தேவையை அணை தருகிறது.

உச்சநீர்மட்டம் : 143 அடி

நீர் இருப்பு : 141.10

அடி

நீர் வரத்து : 549.826 கன அடி

வெளியேற்றம் : 1254.75

கன அடி

சேர்வலாறு :

சேர்வலாறு அணை 1986 ஆம் ஆண்டு 1225 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட மின் உற்பத்திக்காக அமைக்கப்பட்டது. அணையின் உச்ச நீர்மட்டம் 156 அடியாக உள்ளது.அணையின் அனல்மின்நிலையத்தில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மீண்டும் பாபநாசம் அணையில் பாசனத்திற்காக சேமிக்கப்படுகிறது

உச்சநீர்மட்டம் : 156 அடி

நீர் இருப்பு : 143.27 அடி

நீர்வரத்து : NIL

வெளியேற்றம் : NIL

மணிமுத்தாறு :

உச்சநீர்மட்டம்: 118

நீர் இருப்பு : 117.72 அடி

நீர் வரத்து : 370 கனஅடி

வெளியேற்றம் : 380 கன அடி

வடக்கு பச்சையாறு:

உச்சநீர்மட்டம்: 50

அடி

நீர் இருப்பு: 49.20

அடி

நீர் வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

நம்பியாறு:

உச்சநீர்மட்டம்: 22.96 அடி

நீர் இருப்பு: 22.96 அடி

நீர்வரத்து: NIL

வெளியேற்றம்: NIL

கொடுமுடியாறு:

உச்சநீர்மட்டம்: 52.25 அடி

நீர் இருப்பு: 27 அடி

நீர்வரத்து: 3 கன அடி

வெளியேற்றம்: 30 கன அடி.

Tags

Next Story
மொளசி கலைஞர் கனவு இல்லம் கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு..!